நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் இன்று நடந்த விழாவில் நெல்லை மாவட்டத்திற்கு ரூ.696 கோடி மதிப்பிலான திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அர்ப்பணித்தார். விழாவில் 45 ஆயிரம் பேருக்கு ரூ.101 கோடியில் நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.நெல்லை மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலம் நெல்லை வந்தார். அவருக்கு திமுகவினரால் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது வேனில் இருந்து இறங்கி சாலையில் நடந்து சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் இருபுறமும் திரண்டிருந்த தொண்டர்கள் அளித்த உற்சாக வரவேற்பை ஏற்றுக் கொண்டார். பின்னர் ெநல்லை வண்ணாரபேட்டை அரசு விருந்தினர் மாளிகையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து விட்டு மதிய உணவு சாப்பிட்டு ஓய்வெடுத்தார்.பின்னர் மாலை 5 மணிக்கு வண்ணார்பேட்டையில் இருந்து புறப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் நெல்லை டக்கரம்மாள்புரத்தில், ெதன்னிந்திய திருச்சபை நெல்லை திருமண்டலத்தின் சாராள் தக்கர் கன்வென்ஷன் சென்டர் பிரதான நுழைவு வாயிலை திறந்து வைத்தார். தொடர்ந்து அங்குள்ள தரிசனபூமியில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் நடத்திய மனித நேய மகத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்றார்.
சி.கார்த்திகேயன்
