எட்டு புதிய தலைமுறை ஆதம்யா வகுப்பு அதிவேக ரோந்துக் கப்பல்களின் வரிசையில் மூன்றாவது கப்பலான இந்திய கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான ‘அமுல்யா’ கப்பல், டிசம்பர் 19 அன்று கோவாவில் இயக்கி வைக்கப்பட்டது. கோவா ஷிப்யார்டு லிமிடெட் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட இந்த 51 மீட்டர் நீளமுள்ள கப்பல், உள்நாட்டு கப்பல் கட்டுமானத்தில் ஒரு புதிய மைல்கல்லைப் பிரதிபலிக்கிறது. 60%க்கும் மேற்பட்ட உள்நாட்டு உதிரிபாகங்களைக் கொண்ட, ‘விலைமதிப்பற்றது’ என்று பொருள்படும் ‘அமுல்யா’ கப்பல், அரசின் தற்சார்பு இந்தியா மற்றும் மேக்-இன்-இந்தியா முன்முயற்சிகளுக்கு இணங்க, பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் தற்சார்பு நோக்கிய சீரான முன்னேற்றத்தை விளக்கிக் காட்டுகிறது. இது செயல்திறன், நீடித்த உழைப்பு, விரைவான திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் நவீன வடிவமைப்புத் தத்துவத்தை ஒருங்கிணைக்கிறது.
எஸ்.சதிஸ் சர்மா
