பல தசாப்தங்களாக வெள்ளம், தனிமை மற்றும் நீண்ட மாற்றுப் பாதைகளுடன் போராடி வந்த பீகார் மாநிலத்தில் கோசி ஆற்றின் கரையோர மக்களின் கனவு நனவாகி உள்ளது. 13.3 கிலோமீட்டர் நீளமுள்ள பேஜா–பகௌர் கோசி பாலம் இப்போது அதன் கட்டுமானத்தின் இறுதி கட்டத்தில் உள்ளது. இது பயன்பாட்டிற்கு வந்தவுடன், கோசி ஆற்றின் மீதான இந்தப் பாலம் பயணத் தூரத்தை 44 கிலோமீட்டர் குறைத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, பின்தங்கிய மதுபானி மற்றும் சுபௌல் பகுதிகளை தேசிய நெடுஞ்சாலை – 27 மற்றும் பாட்னாவுடன் நேரடியாக இணைக்கும். இது நேபாளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்குத் தடையற்ற பாதைகளையும் திறந்து, எல்லை தாண்டிய வர்த்தகம், பிராந்திய வணிகம் மற்றும் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட முதலீடுகளை ஊக்குவிக்கும். இந்த பணிகள், பாரத்மாலா பரியோஜனா முதற்கட்டத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. ரூ. 1101.99 கோடி முதலீட்டில் கட்டப்படும் இந்தப் பாலம், இப்பகுதியில் இணைப்பை மாற்றுவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகத் திகழ்கிறது. மேலும், இந்தத் திட்டம் 2026-2027 நிதியாண்டில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திவாஹர்
