கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற வீராங்கனைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (15.12.2025) தலைமைச் செயலகத்தில், மாலத்தீவில் நடைபெற்ற 7-வது கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வழங்கி, வாழ்த்தினார்.

மேலும், சென்னையில் நடைபெற்ற SDAT ஸ்குவாஷ் உலகக் கோப்பை 2025 போட்டியில் வெற்றி பெற்றவர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றதோடு, டெல்லியில் நடைபெற்ற 3-வது CII Sports Business Awards 2025 விழாவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு வழங்கப்பட்ட விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலத்திற்கான விருதினையும் காண்பித்து, வாழ்த்து பெற்றனர்.

Leave a Reply