தமிழக அரசு விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பது தான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பாகும்.
தற்போதைய மழைக்காலத்தில் டெல்டா மாவட்டங்கள் உட்பட தமிழகம் முழுவதும் ஆங்காங்கே விளைநிலங்களில் மழைநீர் தேங்கி பயிர்கள் சேதமடைந்துள்ளன.
டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா, தாளடி நெற்பயிர்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. அதே போல கரும்பு, வாழை, வெற்றிலை, மஞ்சள் கொத்து, கிழங்கு வகைகள் ஆகியவையும் முழுமையாக சாய்ந்து பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போதைய வானிலை நிலவரத்தால் நெற்பயிர்கள் பூச்சி நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டு விவசாயிகள் நஷ்டத்தோடு, மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
இச்சூழலில் தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் மழையால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்துப் பகுதிகளின் விளைநிலங்களை விவசாயிகள் மூலமாக முறையாக சரியாக கணக்கிட்டு பயிர் நிவாரணமும், காப்பீட்டுத் தொகையும் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
விவசாயிகளுக்கு நிவாரணத்தை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்த விவசாய அலுவலகம் மூலம் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளதை தமிழக அரசு கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
தமிழக அரசு – மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் உழைப்பை, பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு பொங்கலுக்கு மக்களுக்கு செங்கரும்பு, அச்சுவெல்லம், உருண்டை வெல்லம் உள்ளிட்ட விவசாய விளைப்பொருட்களை வழங்க தமிழக விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வலியுறுத்துகிறேன்.
