பாரதிய ஜனதா கட்சியினரையும், இந்து முன்னணியினரையும் கைது செய்தது ஜனநாயக விரோதச் செயல்!- ஜி.கே.வாசன் கண்டனம்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற முருக பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு பிரப்பித்தது.

நீதிமன்ற உத்தரவை ஏற்று அவற்றை நியாயமாக நடைமுறை படுத்த வேண்டிய தமிழக அரசு, தீபம் ஏற்ற அனுமதிக்காமலும், நீதிமன்றத்தை மதிக்காமலும், காவல்துறையை வைத்துக்கொண்டு தடுக்க நினைப்பது ஜனநாயகத்தில் ஏற்புடையதல்ல.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அனைவருக்கும் பொதுவானதாக, மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டானதாக செயல்பட வேண்டிய தமிழக அரசு அதன்படி செயல்பட தவறுவதும், நீதிமன்ற உத்திரவை மீறி மேல்முறையிடு செய்வதும், மக்கள் நலனுக்கு எதிரானது.

நீதிமன்ற உத்தரவின் படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற முற்பட்ட முருக பக்தர்களையும், அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களையும், திரு. H. ராஜா அவர்களையும், முன்னணி தலைவர்களையும் மற்றும் இந்து முன்னணியினரையும் கைது செய்து இருப்பது கண்டிக்கதக்கது.

முருக பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும், நீதிமன்ற உத்தவு படி தீபம் ஏற்ற அனுமதிக்கவும், கைது செய்யப்பட்ட முருக பக்தர்களையும், தமிழக பாரதிய ஜனதா மற்றும் இந்து முன்னணியினரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) சார்பில் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply