தமிழ்நாட்டின் தொல்லியல் பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாக்க ஐந்து ஆண்டுகளில் ரூ. 74 கோடி நிதி ஒதுக்கீடு.

தமிழ்நாட்டில் சென்னை வட்டத்தின் கீழ் 250 பழங்கால நினைவுச்சின்னங்களும் திருச்சி வட்டத்தில் 162 பழங்கால நினைவுச்சின்னங்களும் உள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் அவற்றின் பாதுகாப்புக்காகவும் பராமரிப்புக்காகவும் ஒதுக்கப்பட்ட நிதியின் விவரங்கள்:

* 2020-21:     7.25 கோடி ரூபாய்

* 2021-22:    12.00 கோடி ரூபாய்

* 2022-23:     19.95 கோடி ரூபாய்

* 2023-24:     22.50 கோடி ரூபாய்

* 2024-25:     12.65 கோடி ரூபாய்

தேசிய தொல்பொருள் நினைவுச்சின்னங்கள் திட்டத்தின் கீழ், மொத்தம் 3931 தொல்பொருட்களும் 922 பாரம்பரிய தளங்கள் தமிழ்நாட்டில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தால் கீழ்க்கண்ட இடங்களில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன:.

1. வடகப்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டம்- (2022-23 முதல் 2023-24 வரை).

2. அமுர், செங்கல்பட்டு மாவட்டம்-(2024-25).

3. ஆதிச்சநல்லூர், தூத்துக்குடி மாவட்டம் -(2021-22).

4. புதுக்கோட்டை மாவட்டம், கொடும்பளூரில் உள்ள குடியிருப்பு மேடு- (2024-25).

மாநிலங்களவையில் இன்று (04.12.2025),

கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய கலாச்சாரம்,  சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

Leave a Reply