தஞ்சாவூரில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. கடந்த ஆண்டு 2024, நவம்பர் 20 ஆம் தேதியன்று தஞ்சாவூர் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை பள்ளி வளாகத்தில் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இன்று தஞ்சாவூர் மாவட்டம் ஆலங்குடி அரசு தொடக்கப்பள்ளியின் தற்காலிக ஆசிரியையான காவியா கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த போது பகல் நேரத்தில் இந்த கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது. தமிழக அரசு கொலைக்குற்றவாளிக்கு உரிய தண்டனையை காலத்தே பெற்றுத்தர வேண்டும்.இப்படி தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சியில் கொலைகள் சர்வசாதாரணமாக நடைபெறுவது மிகவும் வேதனைக்குரியது.
கொலை செய்வதற்கு பயமே இல்லாத சூழல் தமிழ்நாட்டில் நிலவுவதால் பொது மக்கள் அச்சத்துடன் வாழக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.பள்ளி கல்லுரி மாணவிகள், ஆசிரியைகள், முதியோர் என மகளிருக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது.
தமிழக அரசு தொடர்ந்து கொலைகள் நடைபெறுவதை தடுக்கும் விதமாக, கொலைகள் நடைபெறாமல் இருக்கும் விதமாக சட்டம் ஒழுங்கை கடுமையாக்கி, காவல்துறையினரின் பணிகளை, கண்காணிப்பை தீவிரப்படுத்தி ஆட்சி செய்ய வேண்டும்.
ஆனால் தமிழக தி.மு.க அரசு – கொலைச் சம்பவங்கள் தொடராமல் இருக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறிவிட்டது.
மேலும் தற்போதைய தி.மு.க ஆட்சியில் தொடர்ந்து கொலைகள் நடைபெறுவதற்கு காரணம் கொலை செய்தவர்களை கண்டுபிடிப்பதில், வழக்கு பதிவு செய்வதில், விசாரணை செய்வதில், தண்டனை வாங்கிக்கொடுப்பதில் காலத்தே உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது தான்.
எனவே தமிழக அரசு கொலைகள் நடைபெறாமல் இருக்க சட்டம் ஒழுங்கை கடுமையாக்கி, காவல்துறையினரின் பணிகளை துரிதப்படுத்தி செயல்பட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சி.கார்த்திகேயன்
