மத்திய அரசு தமிழக விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
தமிழக அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொள்முதல் செய்யும் போது நெல்லுக்கான ஈரப்பத அளவானது 17 சதவீதமாக இருக்கிறது. இந்த சதவீதத்தை 22 சதவீதமாக உயர்த்த விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நெல்கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவரப்படும் நெல்லின் ஈரப்பத அளவைக் கணக்கில் கொண்டு கொள்முதல் செய்யப்படுகிறது.
இப்போதைய மழைக்காலத்தில் மழை பெய்து வருவதால் நெல்லின் ஈரப்பதமானது உயர்ந்திருக்கிறது.
இச்சூழலில் நெல்லை கொள்முதல் செய்வதற்கான ஈரப்பத அளவும் உயர்த்தப்பட்டால் நெல் பயிரிட்ட விவசாயிகள் பயனடைவார்கள்.
தற்போது நெல் விளைச்சல் அதிகமாகி கொள்முதல் செய்வதற்காக அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன.
இவற்றை கொள்முதல் செய்வதற்கான ஈரப்பத அளவானது 17 சதவீத்தில் இருந்தால் நெல் பயிரிட்ட விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்.
நெல்லுக்கான ஈரப்பதமானது 22 சதவீதமாக இருந்தால் நெல் கொள்முதல் செய்யப்பட்டு அதற்குண்டான பலன் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
எனவே மத்திய அரசு – விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்த உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா
