அமெரிக்காவுடன் முதலாவது பெரிய எல்பிஜி இறக்குமதி ஒப்பந்தத்தை இந்தியா இறுதி செய்துள்ளது.

பிரதமர் திரு நரேந்திர மோடி  தலைமையின் கீழ், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நாடு முழுவதும் உள்ள வீடுகளுக்கு மிகக் குறைந்த விலையில் எல்பிஜி வழங்குவதை உறுதி செய்துள்ளதாக திரு பூரி எடுத்துரைத்தார். கடந்த ஆண்டு உலகளாவிய எல்பிஜி விலை 60 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்த போதும், உண்மையான செலவு ரூ. 1100 -ஐத் தாண்டிய போதும், உஜ்வாலா பயனாளிகள், சுமார் ரூ. 500–550 மானிய விலையில் சிலிண்டர்களைப் பெற்றனர்.  சர்வதேச எல்பிஜி விலை உயர்வு காரணமாக குடும்பங்களை – குறிப்பாக தாய்மார்களையும்  சகோதரிகளையும்  பாதுகாக்க, மத்திய அரசு கடந்த ஆண்டில் ரூ. 40,000 கோடிக்கு மேல் நிதிச் சுமையை ஏற்றுக்கொண்டது.

2026 ஆம் ஆண்டிற்கான இந்தப் புதிய ஏற்பாடு, இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதில் மற்றொரு படியாகும் என்றும், அதே நேரத்தில் லட்சக் கணக்கான வீடுகளுக்கு தூய்மையான சமையல் எரிபொருளை மலிவு விலையில் அணுகுவதை உறுதி செய்யும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply