மும்பையில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 11.88 கிலோ கிராம் தங்கம் பறிமுதல் – 11 பேர் கைது.

ஆபரேஷன் புல்லியன் பிளேஸ் நடவடிக்கையின் கீழ் மும்பையில் மிகப் பெரிய தங்கக் கடத்தலை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் கண்டறிந்து தடுத்துள்ளது. 2025 நவம்பர் 10 அன்று கிடைத்த தகவலின்படி, வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள், மும்பையில் இரண்டு  சட்டவிரோத உருக்கு ஆலைகளிலும், இரண்டு பதிவு செய்யப்படாத கடைகளிலும் சோதனை நடத்தினார்கள். அப்போது கடத்தப்பட்ட தங்கத்தை கட்டிகளாக மாற்றுவதற்கான செயல்பாடுகளில் அவர்கள் ஈடுபட்டது தெரியவந்தது. சம்பவ இடத்தில் 6.35 கிலோ கிராம் தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். அதைத் தொடர்ந்து இரண்டு கடைகளில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது 5.53 கிலோ கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். 

பறிமுதல் செய்யப்பட்ட இந்தத் தங்கம் 24 காரட்டிலான ரூ.15.05 கோடி மதிப்புடையதாகும். இச்சோதனையின் போது, 8.72 கிலோ கிராம் வெள்ளியையும், அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.13.17 லட்சமாகும். இந்த சட்டவிரோத  கடத்தல், உருக்குதல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டதாக 11 பேரை  அதிகாரிகள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.  இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply