அசாமில் சில்சார் நகரம், ஹெய்லகண்டி, கரிம்கஞ்ச் மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் இந்தியத் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) தொலைத்தொடர்பு சேவையின் தரம் குறித்து சோதனை நடத்தியது. கொல்கத்தாவில் உள்ள ட்ராய் மண்டல அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ், நகர்ப்புற பகுதிகள், நிறுவனங்களின் அமைவிடம், கிராமப்புற குடியிருப்புப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் மொபைல் தொலைத் தொடர்பு சேவை குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அசாமில் சில்சார் நகரம், ஹெய்லகண்டி, கரிம்கஞ்ச் மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் 284.1 கிமீ தொலைவிற்கு நகரம் சார்ந்த சோதனை நடத்தப்பட்டது. 10 முக்கிய பகுதிகள் மற்றும் 2.4 கிமீ தொலைவிற்கு நடைவாயிலான சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. ஆகஸ்ட் 18 முதல் 22 வரை இச்சோதனை நடத்தப்பட்டது.
திவாஹர்
