குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (அக்டோபர் 3, 2025) நடைபெற்ற நிகழ்ச்சியில், மௌரித்தேனியா, லக்சம்பர்க், கனடா மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளின் புதிய தூதர்களின் பணி நியமன ஆவணங்களை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.
பணி நியமன ஆவணங்களைச் சமர்ப்பித்தவர்கள்:
1. மௌரித்தேனியா இஸ்லாமியக் குடியரசின் தூதர் திரு அஹ்மெடோ சிடி முகமது
2. லக்சம்பர்க் நாட்டின் தூதர் திரு கிறிஸ்டியன் பீவர்
3. கனடாவின் உயர் ஆணையர் திரு கிறிஸ்டோபர் கூட்டர்
4. ஸ்லோவேனியா குடியரசின் தூதர் திரு. தோமஸ் மென்சின்
திவாஹர்
