- மின்னணு வாக்குச் சீட்டுகளை வடிவமைத்து அச்சிடுவதற்கான தெளிவு மற்றும் வாசிப்புத்திறனை மேம்படுத்துவதற்காக, தேர்தல் நடத்தை விதிகள், 1961 இன் விதி 49B இன் கீழ், இந்திய தேர்தல் ஆணையம் (ECI) தற்போதுள்ள வழிகாட்டுதல்களை திருத்தியுள்ளது.
- தேர்தல் செயல்முறைகளை நெறிப்படுத்தவும் மேம்படுத்தவும் வாக்காளர்களின் வசதியை மேம்படுத்தவும் கடந்த 6 மாதங்களில் தேர்தல் ஆணையம் ஏற்கனவே எடுத்த 28 முயற்சிகளுடன் இந்த முயற்சி ஒத்துப்போகிறது.
- இனிமேல், வேட்பாளர்களின் புகைப்படங்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வாக்குச்சீட்டில் வண்ணத்தில் அச்சிடப்படும். சிறந்த பார்வைக்காக வேட்பாளரின் முகம் புகைப்பட இடத்தில் நான்கில் மூன்று பங்கு இடத்தைப் பிடிக்கும்.
- வேட்பாளர்களின் வரிசை எண்கள்/NOTA, இந்திய எண்களின் சர்வதேச வடிவத்தில் அச்சிடப்படும். எழுத்துரு அளவு 30 ஆகவும், தெளிவுக்காக தடிமனாகவும் இருக்கும்.
- சீரான தன்மையை உறுதி செய்வதற்காக, அனைத்து வேட்பாளர்களின் பெயர்களும்/NOTA-வும் ஒரே மாதிரியான எழுத்துரு வகையிலும், எளிதாகப் படிக்கக்கூடிய அளவுக்குப் பெரிய எழுத்துரு அளவிலும் அச்சிடப்படும்.
- மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வாக்குச்சீட்டுகள் 70 ஜிஎஸ்எம் தாளில் அச்சிடப்படும் . சட்டமன்றத் தேர்தல்களுக்கு, குறிப்பிட்ட RGB மதிப்புள்ள இளஞ்சிவப்பு நிற காகிதம் பயன்படுத்தப்படும்.
- மேம்படுத்தப்பட்ட மின்னணு வாக்குச் சீட்டுகள், பீகாரில் தொடங்கி, வரவிருக்கும் தேர்தல்களில் பயன்படுத்தப்படும்
திவாஹர்
