சாலையை கடக்க முயற்சித்த போது கார் மோதி ஒருவர் பலி! -திருச்சி செந்தணீர்புரம் அருகே நடந்த துயரம்.

சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி செந்தணீர்புரம் அருகே இன்று (செப்டம்பர் 17) மாலை 6:55 மணியளவில் சாலையைக் கடக்க முயன்ற நபர் மீது அதிவேகமாக வந்த கார் ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே அந்த நபர் பலியானார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அருகில் இருந்த நபர்களின் உதவியோடு விபத்தில் உயிரிழந்த நபரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் உயிரிழந்த நபர் யார் என்று தெரியவில்லை.

Leave a Reply