வக்பு வாரியம் சார்பில் பட்டப்படிப்பு பயிலவுள்ள மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

வக்பு வாரியம் சார்பில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு பயிலும் மற்றும் பயிலவுள்ள மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு வக்பு வாரியத்தின் சார்பில் பொருளாதார தடையினால் உயர்கல்வியினை தொடர இயலாத இஸ்லாமிய மாணவ மாணவியர்கள் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பினை தொடர கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து, இஸ்லாமிய மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகையினை வழங்கினார்

Leave a Reply