பெண்களின் அதிகாரமளித்தல் மற்றும் குழந்தைகளின் நலனில் நங்கூரமிடப்பட்ட பெண்கள் தலைமையிலான வளர்ச்சி, 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் விக்ஸித் பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையின் அடித்தளமாகும் என்று மக்களவை சபாநாயகர் ஸ்ரீ ஓம் பிர்லா இன்று வலியுறுத்தினார். திருப்பதியில் இன்று நாடாளுமன்றம் மற்றும் மாநில/யூனியன் பிரதேச சட்டமன்றங்களின் பெண்கள் அதிகாரமளித்தல் குழுக்களின் முதல் தேசிய மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய ஸ்ரீ பிர்லா, நமது மகள்கள் கல்வி கற்று, தன்னிறைவு பெற்றவர்களாக மாறும்போதுதான் இந்தியா அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வளர்ந்த நாடாக மாறும் என்று கூறினார். இந்த மாநாட்டில் 20க்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்
பெண்கள் தலைமையிலான மேம்பாடு – விக்ஸித் பாரதம்” என்ற கருப்பொருளில் இரண்டு நாள் மாநாடு நடைபெறுகிறது. இதில் “பாலினப் பொறுப்புமிக்க பட்ஜெட்” மற்றும் “வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் சவால்களை எதிர்கொள்ள பெண்களுக்கு அதிகாரம் அளித்தல்” ஆகியவை சிறப்பு கவனம் செலுத்துகின்றன. பெண்களின் தலைமையை வலுப்படுத்துதல், நிர்வாகத்தில் பங்கேற்பை மேம்படுத்துதல், உள்ளடக்கிய கொள்கைகளை உறுதி செய்தல் மற்றும் பெண்கள் பயனாளிகளாக மட்டுமல்லாமல் தேசிய வளர்ச்சியின் முக்கிய சிற்பிகளாகவும் இருக்கும் இந்தியாவின் தொலைநோக்கு பார்வையை முன்னேற்றுதல் ஆகியவை குறித்து இந்த விவாதங்கள் மையமாகக் கொண்டிருக்கும்.
இந்தியாவின் ஜனநாயகப் பயணத்தில் முதன்முதலில் நடைபெற்ற பெண்கள் அதிகாரமளிப்புக்கான குழுக்களின் தேசிய மாநாடு ஒரு முக்கிய தருணத்தைக் குறிக்கிறது என்று ஸ்ரீ பிர்லா குறிப்பிட்டார். இத்தகைய மாநாடுகள், எண்ணங்கள் மற்றும் அனுபவங்களைப் பரிமாறிக் கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன, உள்ளடக்கிய கொள்கை வகுப்பிற்கு வழி வகுக்கின்றன என்று அவர் கூறினார். இது நாடு முழுவதும் உள்ள சட்டமியற்றுபவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பெண் தலைவர்களை ஒன்றிணைத்து, பெண்களின் தலைமை, சமத்துவம் மற்றும் வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் உள்ளடக்கிய உத்திகளை கூட்டாக வகுக்க உதவியுள்ளது.
எம்.பிரபாகரன்
