இந்தியாவின் நல்லாட்சி நடைமுறைகள் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெறுகின்றன: டாக்டர் ஜிதேந்திர சிங்.

பீகார் அரசுடன் இணைந்து நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது குறைகள் துறை (DARPG) ஏற்பாடு செய்துள்ள “மாவட்டங்களின் முழுமையான வளர்ச்சி” குறித்த 2 நாள் தேசிய மாநாட்டை, மத்திய பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்; புவி அறிவியல் துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று தொடங்கி வைத்தார்.

பின்தங்கிய மாவட்டத்திற்கு பதிலாக மோடி அரசு அறிமுகப்படுத்திய லட்சிய மாவட்ட மாதிரியைப் பாராட்டிய அமைச்சர், “லட்சண மாவட்ட மாதிரி பின்தங்கிய நிலையைப் பற்றியது அல்ல; இது போட்டித்தன்மை மற்றும் ஒருங்கிணைப்பு பற்றியது. நிகழ்நேர கண்காணிப்பு, அறிவியல் அளவுகோல்கள் மற்றும் பங்கேற்பு, குடிமக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறை மூலம் மாவட்டங்கள் தரவரிசைப்படுத்தப்படுகின்றன” என்றார்.

Leave a Reply