ஓசூரில் ரூ.450 கோடியில் அமையும் டெல்டா நிறுவனத்தின் விரிவாக்க திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

ஓசூரில் ரூ.450 கோடியில் அமையும் டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் விரிவாக்க திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள சிப்காட் குருபரபள்ளி தொழிற் பூங்காவில் அமைந்துள்ள டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் 450 கோடி ரூபாய் முதலீட்டில் 400-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 2 விரிவாக்க திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, ஒரு புதிய மேம்படுத்தப்பட்ட உற்பத்தி வரிசையையும் தொடங்கி வைத்தார்.

Leave a Reply