இந்தியா- இலங்கை கடற்படை கூட்டுப் பயிற்சி ஸ்லைநெக்ஸ்-2025 நிறைவடைந்தது.

இந்தியா- இலங்கை கடற்படை இடையேயான கூட்டுப் பயிற்சி ஸ்லைநெக்ஸ்-2025 கொழும்பில் 2025 ஆகஸ்ட் 18 அன்று நிறைவடைந்தது. இப்பயிற்சியில் இந்தியக் கடற்படை கப்பல்கள் ஐஎன்எஸ் ஜோதி, ஐஎன்எஸ் ராணா ஆகிய கப்பல்களும், இலங்கை கடற்படை கப்பல்கள் எஸ்எல்என்எஸ் கஜபாகு, எஸ்எல்என்எஸ் விஜயபாகு ஆகிய கப்பல்களும் பங்கேற்றன.

பயிற்சிக்காக கொழும்பு துறைமுகம் சென்றடைந்ததும், ஐஎன்எஸ் ஜோதி, ஐஎன்எஸ் ராணா கப்பல்களின் கட்டளை அதிகாரிகள் இலங்கையின் மேற்கு கடற்படை கமாண்டர் ரியர் அட்மிரல் சந்திமா சில்வாவை சந்தித்து பேசினார்கள். அப்போது இருதரப்பு கடற்படை ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதித்தனர். தங்களது நடைமுறைகளையும் பகிர்ந்து கொண்டனர். அத்துடன் 1987-ம் ஆண்டு முதல் 1990-ம் ஆண்டுக்கு இடையே இலங்கையில் நடைபெற்ற அமைதி நடவடிக்கையின் போது உயிர்த் தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்களின் துணிச்சலை கௌரவிக்கும் வகையில் இந்திய அமைதிப்படை நினைவிடத்திற்குச் சென்றும் அவர்கள் மரியாதை செலுத்தினார்கள்.

இரண்டு கட்டங்களாக நடைப்பெற்ற இப்பயிற்சியின் துறைமுக பயிற்சி ஆகஸ்ட் 14 முதல் 16 வரையும், கடல்பகுதி பயிற்சி 17 முதல் 18 வரையிலும் நடைபெற்றது.

Leave a Reply