முன்னாள் படைவீரர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் பொருட்டு ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ என்ற புதிய திட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

முதல்வரின் காக்கும் கரங்கள்” என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, 150 முன்னாள் படைவீரர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான ஒப்புதல் ஆணைகளை வழங்கினார். நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க, கொட்டும் மழையிலும், குளிரிலும் தமது இன்னுயிரையும் பொருட்படுத்தாது தாய் திருநாட்டிற்காக தங்களது இளம் வயதை ராணுவப் பணியில் கழித்து, பணிக்காலம் நிறைவு பெற்ற, ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்களின் நலன் காக்க, ராணுவப் பணியில் சேரும் முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு தொகுப்பு ஊதியம் வழங்குதல், படைப் பணியில் போர் மற்றும் போரையொத்த நடவடிக்கைகளில் உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு, முன்னாள் படைவீரர்களுக்கு மறுவேலைவாய்ப்பு அளித்தல், முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு போன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

கடந்த 2024ம் ஆண்டு சுதந்திர தின உரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தாய்நாட்டிற்காகத் தங்களது இளம் வயதை ராணுவப் பணியில் கழித்து, பணிக்காலம் நிறைவு பெற்ற, ஓய்வுபெற்ற முன்னாள் படைவீரர்களது பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்திடவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும், “முதல்வரின் காக்கும் கரங்கள்” என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தார்

Leave a Reply