பிரதமர் திரு நரேந்திர மோடியுடன், ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புதின் தொலைபேசி மூலம் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
அலாஸ்காவில் கடந்த வாரம் அமெரிக்க அதிபர் திரு டொனால்டு ட்ரம்புடன் தாம் நடத்திய சந்திப்பு குறித்து தனது கருத்துக்களை, ரஷ்ய அதிபர் பிரதமருடன் பகிர்ந்து கொண்டார்.
மோதல்களுக்கு தூதரக ரீதியில் பேச்சுவாரத்தை மூலம் அமைதி வழியில் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் உறுதியான நிலைப்பாடாக உள்ளது என்றும் இது தொடர்பாக மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவளிக்கும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்தியா – ரஷ்யா இடையே உத்திசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது என்றும், பல்வேறு விவகாரங்களில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து தொடர் பேச்சுவார்த்தை நடத்துவது என்றும் இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
திவாஹர்
