பீகாரில் வாக்காளர் தீவிர சிறப்புத் திருத்தத்தின் அடிப்படையில், 2025 ஆகஸ்ட் 01 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இது தொடர்பாக ஒரு மாதத்திற்குள் முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று (03.08.2025) மாலை 3 மணி வரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் விவரம்.
- அரசியல் கட்சிகளிடமிருந்து கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் இதுவரை பெறப்படவில்லை.
- வரைவுப் பட்டியல் தொடர்பாக வாக்காளர்களிடமிருந்து நேரடியாகப் பெறப்பட்ட கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் எண்ணிக்கை – 941
- 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதை எட்டிய புதிய வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்ட படிவங்கள் – 4,374
விதிகளின்படி, உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகள் 7 நாட்களுக்குப் பிறகு சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரி அல்லது வாக்காளர் பதிவு உதவி அதிகாரியால் தீர்க்கப்பட வேண்டும்.
திவாஹர்
