திரு.நரேந்திர மோடி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, புனிதமான சாவான் மாதத்தில் வாரணாசியைச் சேர்ந்த குடும்பங்களைச் சந்தித்தது குறித்த மன நிறைவை வெளிப்படுத்தினார். வாரணாசி மக்களுடனான தமது ஆழமான உணர்ச்சிபூர்வமான தொடர்பை எடுத்துரைத்த திரு மோடி, நகரத்தின் ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் தமது மரியாதைக்குரிய வாழ்த்துகளைத் தெரிவித்தார். புனிதமான சாவான் மாதத்தில் காணொலி மூலம் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுடன் இணைவதில் திரு மோடி திருப்தி தெரிவித்தார்.
ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு வாரணாசிக்கு இது தமது முதல் வருகை என்று பிரதமர் கூறினார். ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை நினைவு கூர்ந்த அவர், 26 அப்பாவி மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டதைக் குறிப்பிட்டார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் உணர்ந்த மிகப்பெரிய வலியை, குறிப்பாக சோகத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் மகள்களின் துயரத்தை திரு மோடி எடுத்துரைத்தார். தமது இதயம் துக்கத்தால் வேதனையில் இருந்ததாகவும், அந்த நேரத்தில், இழந்த அனைத்து குடும்பங்களுக்கும் அவர்களின் துன்பத்தைத் தாங்க வலிமை அளிக்க பாபா விஸ்வநாத்திடம் பிரார்த்தனை செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார். மகள்களின் சிந்தூரத்தைப் பறித்தவர்களைப் பழிவாங்குவதாக தாம் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதாக பிரதமர் உறுதிப்படுத்தினார். மகாதேவரின் ஆசீர்வாதத்தால் மட்டுமே இது சாத்தியமானது என்பதை அவர் தெரிவித்தார். மேலும் ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை மகாதேவரின் பாதங்களில் அர்ப்பணிப்பதாக தெரிவித்தார்.
சமீப நாட்களில், வாரணாசியில் சிவ பக்தர்கள் கங்கா தீர்த்தத்தை ஏந்திச் செல்வதைச் சுட்டிக்காட்டிய அவர், குறிப்பாக சாவான் மாதத்தின் முதல் திங்கட்கிழமை, பக்தர்கள் பாபா விஸ்வநாதரின் புனித ஜலாபிஷேகத்தை நிறைவேற்றப் புறப்பட்டதை நினைவு கூர்ந்தார். யாதவ சகோதரர்கள் கௌரி கேதார்நாத்திலிருந்து கங்கா தீர்த்தத்தைத் தோளில் சுமந்து செல்லும் கண்கவர் காட்சியைப் பற்றி அவர் குறிப்பிட்டார், இது உண்மையிலேயே ஒரு ரம்மியமான காட்சி என்று விவரித்தார். முரசின் சத்தம், பாதைகளில் துடிப்பான ஆற்றல், அவர் சூழ்நிலையை அசாதாரணமானது என்று அழைத்தார். புனித சாவான் மாதத்தில் பாபா விஸ்வநாதர் மற்றும் மார்க்கண்டேய மகாதேவரைப் பார்வையிட வேண்டும் என்ற தமது தனிப்பட்ட விருப்பத்தை திரு மோடி வெளிப்படுத்தினார். இருப்பினும், அவரது இருப்பு மகாதேவின் பக்தர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடும் அல்லது அவர்களின் தரிசனத்தை சீர்குலைக்கக்கூடும் என்றும், எனவே இங்கிருந்து போலேநாத் மற்றும் கங்கை மாதாவுக்கு வணக்கங்களைத் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கங்கைகொண்ட சோழபுரம் கோயிலுக்குச் சென்றதை நினைவுகூர்ந்த திரு. மோடி, ஆயிரம் ஆண்டுகள் பழமையான நினைவுச்சின்னமும், இந்தியாவில் சைவ மரபின் ஒரு பழங்கால மையமுமான இந்தக் கோயிலை வட இந்தியாவிலிருந்து கங்கா தீர்த்தத்தைக் கொண்டு வந்த புகழ்பெற்ற மன்னர் ராஜேந்திர சோழன் கட்டியதாகக் குறிப்பிட்டார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, சிவபெருமான் மீதான தனது பக்தியாலும், சைவ மரபின் மீதான அர்ப்பணிப்பாலும், ராஜேந்திர சோழன் ” lஒரே பாரதம், உன்னத பாரதம்” என்ற தொலைநோக்குப் பார்வையை அறிவித்தார் என்பதை அவர் எடுத்துரைத்தார். இன்று, காசி-தமிழ் சங்கமம் போன்ற முயற்சிகள் மூலம், அந்த மரபு முன்னோக்கி கொண்டு செல்லப்படுகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். கங்கைகொண்ட சோழபுரத்திற்கு சமீபத்தில் சென்றபோது, கங்கை நீரைத் தம்முடன் எடுத்துச் சென்றதாகவும், கங்கை அன்னையின் ஆசியுடன், பூஜை மிகவும் புனிதமான சூழ்நிலையில் நடத்தப்பட்டதாகவும் அவர் பகிர்ந்து கொண்டார். இதுபோன்ற நிகழ்வுகள் நாட்டில் ஒற்றுமையின் உணர்வைத் தூண்டுகின்றன, இது ஆபரேஷன் சிந்தூர் போன்ற பணிகளின் வெற்றிக்கு வழிவகுக்கிறது என்று அவர் கூறினார். 140 கோடி இந்தியர்களின் ஒற்றுமை ஆபரேஷன் சிந்தூரின் பலமாக மாறியது என்றும் அவர் கூறினார்.
வாரணாசியில் நடைபெறும் விவசாயிகள் விழாவின் பிரமாண்டமான கொண்டாட்டத்தை சிறப்பித்துக் காட்டிய பிரதமர், பிரதமர்-கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 10 கோடி விவசாய சகோதர சகோதரிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ 21,000 கோடி பரிமாற்றப்பட்டுள்ளதாக அறிவித்தார். இந்த நிகழ்வின் போது ரூ 2,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள மேம்பாட்டுத் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். பாபாவின் ஆசீர்வாதத்துடன், வாரணாசியில் தடையற்ற வளர்ச்சிப் பாதை தொடர்கிறது என்று திரு மோடி குறிப்பிட்டார். அங்குள்ள அனைவருக்கும் மற்றும் நாட்டின் விவசாயிகளுக்கும் அவர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். சில நாட்களுக்கு முன்பு சுற்றுலா வழிகாட்டி போட்டியை நடத்தியதாக பிரதமர் மேலும் குறிப்பிட்டார். இந்த நாட்களில், காசி நாடாளுமன்ற உறுப்பினர் புகைப்படப் போட்டி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வேலைவாய்ப்பு கண்காட்சி போன்ற நிகழ்வுகளும் நடைபெற உள்ளன, இந்த முயற்சிகள் வெற்றிபெற அவர் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இதுபோன்ற முயற்சிகளுக்கு நிர்வாகத்தையும் அவர் பாராட்டினார்.
விவசாயிகளின் முன்னேற்றத்துக்காக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதை உறுதிப்படுத்திய திரு. மோடி, முந்தைய அரசுகளுடன் இதை வேறுபடுத்தி, விவசாயிகளின் பெயரில் வெளியிடப்பட்ட ஒரு அறிவிப்பு கூட அரிதாகவே நிறைவேற்றப்படுகிறது என்று கூறினார். தங்கள் அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறது என்பதைத் தெரிவித்த அவர், பிரதமரின் கிசான் சம்மான் நிதியை அரசின் உறுதிப்பாட்டிற்கு சான்றாகக் குறிப்பிட்டார்.
2019-ல் பிரதமரின் கிசான் சம்மான் நிதி தொடங்கப்பட்டபோது, சில முக்கிய எதிர்க்கட்சிகள் பல்வேறு வதந்திகளைப் பரப்பி வந்ததாகவும், சிலர் தேர்தலுக்குப் பிறகு பணம் நிறுத்தப்படும் என்றும், வேறு சிலர் பரிமாற்றப்படும் பணம் திரும்பப் பெறப்படும் என்றும் கூறியதாகவும் திரு. மோடி கூறினார். இது எதிர்க்கட்சியின் உண்மையான தன்மையைப் பிரதிபலிக்கிறது, இது விவசாயிகளையும் நாட்டு மக்களையும் தவறாக வழிநடத்துகிறது என்று அவர் குறிப்பிட்டார். ஒரு தவணையாவது நிறுத்தப்பட்டதா என்று கேட்ட பிரதமர், பிரதமரின் கிசான் சம்மான் நிதி, தடையின்றித் தொடர்கிறது என்று கூறினார். இதுவரை, ரூ.3.75 லட்சம் கோடி நேரடியாக விவசாயிகளின் கணக்குகளுக்கு பரிமாற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். உத்தரப் பிரதேசத்தில் மட்டும், சுமார் 2.5 கோடி விவசாயிகள் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர், ரூ.90,000 கோடிக்கும் மேல் பெற்றுள்ளனர். வாரணாசியில் உள்ள விவசாயிகள் கிட்டத்தட்ட ரூ.900 கோடியைப் பெற்றுள்ளனர் என்று திரு. மோடி மேலும் கூறினார். இந்தத் திட்டத்தின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், நிதி எந்தக் கழிவுகளோ அல்லது கமிஷன்களோ இல்லாமல் விவசாயிகளைச் சென்றடைந்துள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார். இது தமது அரசால் நிறுவப்பட்ட நிரந்தர ஏற்பாடு – எந்தக் கசிவும் இருக்காது, ஏழைகளின் உரிமைகள் மறுக்கப்படாது என்றும் அவர் கூறினார்.
எம்.பிரபாகரன்
