குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (2025 ஜூலை 29) குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டொமினிகன் குடியரசு, திமோர்-லெஸ்தே, இலங்கை, காபோன்ஸ் குடியரசு ஆகிய நாடுகளின் தூதர்கள், துணை தூதர்களிடமிருந்து பணிநியமன ஆணைகளை ஏற்றுக்கொண்டார்.
டொமினிகன் குடியரசுத் தூதர் திரு. பிரான்சிஸ்கோ மேனுவல் கம்ப்ரெஸ் ஹெர்னாண்டஸ், திமோர்-லெஸ்தே ஜனநாயக குடியரசுத் தூதர் திரு கார்லிடோ நியூன்ஸ், இலங்கை ஜனநாயக குடியரசுத் துணைத் தூதர் திருமதி பிரதீபா மஹிஷினி கலோன், காபோன்ஸ் குடியரசு துணைத் தூதர் திரு கய் ரோட்ரிக் திகாயி ஆகியோர் தங்களது பணி நியமன ஆணைகளை குடியரசுத் தலைவரிடம் வழங்கினார்கள்.
எம் . பிரபாகரன்
