கதி சக்தி விஸ்வவித்யாலயாவின் மூன்றாவது பட்டமளிப்பு விழா இன்று வதோதராவில் நடைபெற்றது. பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங் இந்த விழாவில் காணொலி காட்சி மூலம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு. ராஜ்நாத் சிங், இந்தியாவின் உள்கட்டமைப்பு மற்றும் தளவாடத் துறைகளில் முன்னெப்போதும் இல்லாத மாற்றத்தைக் கண்டு வருவதாகவும், இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்து வருவதாகவும் கூறினார்.
21 ஆம் நூற்றாண்டின் இந்தியாவிற்கு ஒரு திருப்புமுனையாக தளவாடத் துறையை மேலும் விவரித்த ரக்ஷா மந்திரி, இது இளைஞர்களுக்கு மகத்தான வாய்ப்புகளைக் கொண்டுள்ளது என்றும், வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்றும், வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
தளவாடங்களின் முக்கியத்துவத்தை விளக்கிய அவர், தளவாட சேவைகள் வலுவாக இருந்தால், நமது எல்லைகள் வலுவாக இருக்கும் என்றார். நாட்டின் ஒரு பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பாதுகாப்புப் பொருட்களையோ அல்லது வீரர்களுக்கான உணவுப் பொருட்களையோ சரியான நேரத்தில் எல்லைக்கு வழங்கும்போது, எல்லைக் காவல்படையினரின் மன உறுதி வலுவடைகிறது.
அரசாங்கத்தின் முன்முயற்சிகளை எடுத்துரைத்த திரு. ராஜ்நாத் சிங், பன்முக போக்குவரத்து மையங்களை உருவாக்குதல் மற்றும் மிஷன் முறை திட்டங்களை செயல்படுத்துதல் போன்ற முன்முயற்சிகள் தளவாடச் செலவுகளைக் கணிசமாகக் குறைத்து, தரவு அடிப்படையிலான முடிவெடுப்பதை ஊக்குவித்தன என்றார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய மத்திய ரயில்வே அமைச்சரும், கதி சக்தி விஸ்வவித்யாலயாவின் வேந்தருமான ஸ்ரீ அஸ்வினி வைஷ்ணவ், கடந்த 11 ஆண்டுகளில் இந்திய ரயில்வேயில் ஏற்பட்டுள்ள மாற்றத்தக்க மாற்றங்களை எடுத்துரைத்தார். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ரயில் நெட்வொர்க் 5,300 கி.மீ விரிவடைந்துள்ளதாகவும், சுரங்கப்பாதை கட்டுமானம் மொத்தம் 368 கி.மீ.யை எட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எம்.பிரபாகரன்
