பிரேசிலில் உள்ள இந்திய சமூகத்தினரின் உற்சாக வரவேற்புக்குப் பிரதமர் நரேந்திர மோதி மகிழ்ச்சி.

ரியோ டி ஜெனிரோவில் தமக்கு அளிக்கப்பட்ட அன்பான வரவேற்புக்காக பிரேசிலில் உள்ள இந்திய சமூகத்தினரை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டி அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்திய கலாச்சாரத்துடன் அவர்கள் இணைந்திருக்கிறார்கள் என்பதும் இந்தியாவின் வளர்ச்சியில் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என்பதும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். வரவேற்பிலிருந்து சில காட்சிகளையும் திரு நரேந்திர மோடி தமது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“ரியோ டி ஜெனிரோவில் பிரேசிலின் இந்திய சமூகத்தினர் மிகவும் உற்சாகமான வரவேற்பை அளித்தனர். அவர்கள் இந்திய கலாச்சாரத்துடன் இணைந்திருக்கிறார்கள் என்பதும் இந்தியாவின் வளர்ச்சியில் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என்பதும் மகிழ்ச்சியாக இருக்கிறது!”

Leave a Reply