தேசிய மருத்துவர் தினத்தில் மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

தேசிய மருத்துவர் தினம் வருடம்தோறும் ஜூலை 1-ஆம் தேதி மேற்கு வங்க முன்னாள் முதல்வரும் மருத்துவரும் ஆன பி.சி. ராய் அவர்களின் பிறந்தநாளான இன்று மருத்துவத்துறையில் அவரின் அர்பணிப்வையும், சேவையையும் போற்றும் வகையில் தேசிய மருத்துவர் தினமாக கொண்டாடப்படுகிறது.

மருத்துவர்கள் மக்கள் நலனில் அக்கரைக் கொண்டு இரவு பகல் பாராமல் அர்ப்பணிப்பு உணர்வோடும், மனிதநேயத்தோடும், சகோதரத்துவோடும் சிகிச்சை அளிப்பது போற்றுதலுக்குரியது. கடந்த காலத்தில் கோரானா தாக்கத்தின் போது தன்னுயிரையும் பாராமல் தியாக சிந்தனையோடும், மன உறுதியோடும், மக்கள் பணியாற்றியதை நன்றியுடன் நினைவுகூறுவோம்.

ஏழைய, எளிய, நடுத்தர மக்களின் வாழ்வில் ஒளியேற்ற அனுதினமும் தன்னலம் இல்லாமல், பொதுநலத்தோடு பணியாற்றும் மருத்துவர்களின் கோரிக்கைகள் பல இன்னும் தமிழக அரசால் நிறைவேற்றப்படாமல் உள்ளது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. தற்பொழுது அரசு மருத்துவர்கள் தங்களின் ஊதிய உயர்விற்காகவும் அடிப்படை கோரிக்கைகளுக்காகவும் போராட வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

இறைவனுக்கு அடுத்ததாக நம் உயிரை காக்கும் பணியில் அயராது பாடுப்படும் மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை தேசிய மருத்துவ தினத்தில் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். மருத்துவர்கள் அனைவருக்கும் தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்களை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் ‌

Leave a Reply