மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் இந்தியாவில் பாதுகாப்பான விமானப் பயணத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, விமான நிலையங்கள் முழுவதும் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து உரிய கவனம் செலுத்தப்பட வேண்டுமென்று ஜூன் 19-ம் தேதி, அந்த இயக்குநரகம் வெளியிட்டுள்ள ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணை தலைமை இயக்குநர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு குழுக்கள் டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் இரவு, அதிகாலை நேரங்களில் விரிவான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன. விமானப் போக்குவரத்து செயல்பாடுகள், விமானங்களின் செயல்திறன், பாதுகாப்பு, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு, தகவல் தொடர்பு, மற்றும் கண்காணிப்பு அமைப்புகள், விமானத்தில் ஏறுவதற்கு முந்தைய மருத்துவ மதிப்பீடுகள் போன்ற பல்வேறு முக்கியமான அம்சங்கள் இந்த கண்காணிப்பு நடவடிக்கையில் இடம்பெற்றிருந்தன. விமான நிலையங்களில் பலவீனமான பகுதிகளை அடையாளம் காணவும் தரைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் விமான இயக்கங்கள் ஆகியவையும் கண்காணிக்கப்பட்டன.
திவாஹர்
