இந்திய ராணுவக்குழு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தியா-பிரான்ஸ் கூட்டு ராணுவப் பயிற்சியான சக்தியின் 8-வது பதிப்பில் பங்கேற்க இன்று புறப்பட்டது. இந்தப் பயிற்சி 2025 ஜூன் 18 முதல் 2025 ஜூலை 1 வரை பிரான்சின் லா கவாலரியில் உள்ள கேம்ப் லார்சாக்கில் நடைபெறும்.
90 வீரர்களைக் கொண்ட இந்தியக்குழுவில், ஜம்மு- காஷ்மீர் ரைபிள்ஸின் ஒரு பட்டாலியன், இதர ஆயுதம் மற்றும் சேவைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். 90 வீரர்களைக் கொண்ட பிரெஞ்சுக் குழுவில் 13-வது வெளிநாட்டு லெஜியன் ஹாஃப்-பிரிகேடின் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
செயல்பாட்டு ஒருங்கிணைப்பு, இருநாட்டு ராணுவத்திற்கும் இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதை இப்பயிற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.
பயிற்சி ஒத்திகை, திட்டமிடல், நுட்பங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வது ஆகியவை இந்தப் பயிற்சியில் மேற்கொள்ளப்படும்.
எம்.பிரபாகரன்
