தமிழக அரசு, பட்டாசு ஆலை தொழிலாளர்களின் பாதுகாப்புக்கும், ஆலைகளின் பாதுகாப்புக்கும் கூடுதல் கவனம் செலுத்தி தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!- ஜி.கே.வாசன்‌ வலியுறுத்தல்.

தமிழக அரசு பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பிற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் தொடர்ந்து பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து நடைபெற்று வருகிறது.

இன்றைக்கு கூட விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியை அடுத்த வடகரையில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனைக்குரியது.

மூலப்பொருட்களை கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது இந்த வெடி விபத்து நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும் பட்டாசு ஆலையின் சில அறைகள் தரைமட்டமாகின.

2 பெண் தொழிலாளி ஒரு ஆண் தொழிலாளி என 3 பேர் உயிரிழந்ததால் அப்பகுதி மக்கள் சோகத்தில் உள்ளனர். மேலும் பல தொழிலாளர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளித்து அவர்கள் விரைவில் குணமடைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு வெடி விபத்துக்கான காரணத்தை விசாரணை மேற்கொண்டு கண்டறிய வேண்டும்.

ஆலையின் பாதுகாப்பை ஆலையின் நிர்வாகம் முறையாக கண்காணித்ததா.

பட்டாசு ஆலைகளில் தொடர்ந்து விபத்துகள் நடைபெற்று உயிரழப்புகள் ஏற்படுவதும், பலர் காயமடைவதும், சிகிச்சை பெறுவதும் நீடிப்பது இனி தொடரக்கூடாது.

எனவே தமிழக அரசு தொடர்ந்து நடைபெற்று வரும் பட்டாசு ஆலைகளின் விபத்தினை தடுக்கும் விதமாக இனிமேல் இது போன்ற விபத்துகள் நடைபெறாமல் இருக்கும் விதமாக தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வலியுறுத்துகிறேன்.

மேலும் தமிழக அரசு பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கவும் காயமடைந்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கவும் முன்வர வேண்டும்.

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply