சர்வதேச பெருங்கடல்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்க மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பிரான்ஸ் புறப்பட்டுச் சென்றார்.

மத்திய புவி அறிவியல் இணையமைச்சர்(தனிப் பொறுப்பு )டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று பிரான்ஸ் புறப்பட்டுச் சென்றார். அங்கு நடைபெறவுள்ள சர்வதேச பெருங்கடல்கள் சந்திப்புக் கூட்டத்தில் பங்கேற்கும் இந்தியக் குழுவிற்கு அவர் தலைமை வகிக்கிறார். பிரான்சின் அழகிய கடற்கரை நகரமான நீஸில் “ஐக்கிய நாடுகளின் பெருங்கடல் மாநாடு” (UNOC3) 2025 ஜூன் 8 முதல் 13 வரை நடைபெறுகிறது.

உலகம் முழுவதிலுமிருந்து விஞ்ஞானிகள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்களை ஒன்றிணைத்து, நிலையான கடல் நிர்வாகம், உலகப் பெருங்கடல்களின் ஆரோக்கியத்திற்கான உறுதியான நடவடிக்கைகள் ஆகியவை குறித்து விவாதிக்க இந்த உயர்மட்ட சர்வதேச கூட்டம் நடைபெறுகிறது.

புவி அறிவியல் அமைச்சரின் பிரான்ஸ் பயணம், கடல் நிலைத்தன்மை, கடல்சார் ஒத்துழைப்பு குறித்த இந்தியாவின் உலகளாவிய ஈடுபாட்டிற்கான பிரதமர் திரு நரேந்திர மோடியின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்தப் பயணத்தில் அவர் முக்கிய நட்பு நாடுகளின் அமைச்சர்களுடன் இருதரப்பு சந்திப்புகளிலும் பங்கேற்பார்.

Leave a Reply