சுற்றுச்சூழலை காக்கும் ஹீரோக்கள்தான் வனக்காவலர்கள்; மஞ்சப்பை திட்டம் மக்கள் திட்டமாக மாற வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.

வனக்காவலர்கள் தான் காடுகளின் முதுகெலும்பு. நமது சுற்றுச்சூழலை பாதுகாக்கும் ஹீரோக்கள் நீங்கள் தான்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை வர்த்தக மையத்தில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் நடந்த விழாவில் முதல்வர் பேசியதாவது: இன்று உலக சுற்றுச்சூழல் நாள் மட்டுமல்ல; நாம் வாழும் பூமி கடும் நெருக்கடியில் இருக்கின்றது என்னும் கடினமான உண்மையை உணர கூடிய நாள். காடு தான் இந்த புவி மூச்சுவிட உதவும் நுரையீரல் என்றும் உரையாற்றினார்.

Leave a Reply