தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (3.6.2025) சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளான செம்மொழிநாள் விழாவில், 2025-ஆம் ஆண்டுக்கான கலைஞர் செம்மொழித்தமிழ் விருது, செம்மொழி நாள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் 5 பேருக்கு உயர்த்தப்பட்ட உதவித் தொகை ஆணைகளை வழங்கி, தமிழ்நாடு அரசின் நான்காண்டு சாதனை மலரினையும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட தமிழ் வினையடிகள் – வரலாற்று மொழியியல் ஆய்வு மற்றும் சங்க இலக்கியச் சொல்வளம் ஆகிய நூல்களையும் வெளியிட்டார்.
கே.பி.சுகுமார்
