யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு: தருமபுரி மாணவர் தமிழக அளவில் முதலிடம்.

2024 செப்டம்பரில் மத்திய குடிமைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குடிமைப் பணித் தேர்வு, 2024-ன் எழுத்துத் தேர்வு மற்றும் 2025 ஜனவரி – ஏப்ரலில் நடைபெற்ற ஆளுமைத் தேர்வின்  அடிப்படையில், நியமனத்திற்குப் பரிந்துரைக்கப்பட்ட விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

(i) இந்திய ஆட்சிப் பணி;

(ii) இந்திய வெளியுறவுப் பணி;

(iii) இந்திய காவல் பணி; மற்றும்

(iv) மத்திய அரசுப் பணிகள், குரூப் ‘ஏ’ மற்றும் குரூப் ‘பி’ பணிகளுக்கு அவர்கள்  தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மொத்தம் 1009 பேர் நியமனத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்

இவர்களில் பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் 335 பேரும், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள்  109  பேரும். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 318 பேரும், எஸ்சி பிரிவினர் 160 பேரும் எஸ்டி பிரிவினர் 87 பேரும்  அடங்குவர்.

இதில் இந்திய ஆட்சிப்பணிக்கு பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் 73 பேரும், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள்  18 பேரும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 52 பேரும்,  எஸ்சி பிரிவினர் 24 பேரும்,   எஸ்டி பிரிவினர் 13 பேரும் என மொத்தம் 180 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்திய வெளியுறவுப்பணிக்கு பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் 23 பேரும், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் 5 பேரும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 13 பேரும்,  எஸ்சி பிரிவினர் 9 பேரும்,   எஸ்டி பிரிவினர் 5 பேரும் என மொத்தம் 55 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்தியக் காவல் பணிக்கு பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் 60 பேரும், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள்  14 பேரும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 41 பேரும்,  எஸ்சி பிரிவினர் 22 பேரும்,   எஸ்டி பிரிவினர் 10 பேரும் என மொத்தம் 147 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply