தமிழக அரசு இந்து மத நம்பிக்கைக்கு எதிர்மறையான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.
காரணம் தமிழ்நாட்டின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களே முன்னாள் முதல்வர் கலைஞர் சமாதியில் கோவில் கோபுரம் போல் அலங்கரித்து மரியாதை செலுத்தியது சர்ச்சைக்குரியது.
அதாவது இந்து மத நம்பிக்கைக்கு எதிராக ஒரு சமாதியில் கோவில் கோபுர வடிவம் அமைத்தது இந்துக்களை துன்புறுத்தியதற்கு சமம். இது ஒரு போதும் ஏற்புடைய செயல் அல்ல.
இந்துக்களுக்கு ஆதரவாக, நியாயமாக, நடுநிலையாக செயல்பட வேண்டிய தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் இப்படி ஒரு தவறான முன்னுதாரணத்திற்கு எடுத்துக்காட்டாக செயல்பட்டது தமிழக மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பகுத்தறிவு பற்றி பேசும் தி.மு.க வின் இச்செயலை மக்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
எனவே இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களின் இந்து மத விரோதப்போக்கை தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கண்டித்து, தமிழக அரசு இது போன்ற இந்து மத நம்பிக்கைக்கு எதிரான செயல்பாட்டை இனியும் அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கே.பி.சுகுமார்
