திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், மொத்தம் ரூ.1166.32 கோடி மதிப்பிலான 6760 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 7369 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 2,02,531 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இன்று (18.4.2025) திருவள்ளூர் மாவட்ட அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக செல்லும் வழியில் பொன்னேரியில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து, முதலமைச்சர் அவர்களுடன் செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை முதலமைச்சர் பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (18.4.2025) திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, ஆண்டார்குப்பத்தில் நடைபெற்ற அரசு விழாவில், 418 கோடியே 15 இலட்சத்து 24 ஆயிரம் ரூபாய் செலவிலான 6760 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 390 கோடியே 74 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 7369 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 357 கோடியே 43 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 2,02,531 பயனாளிகளுக்கு வழங்கினார்.
எஸ்.திவ்யா
