தமிழ்நாட்டில் வேலூர் அருகே ஓடும் இரயிலில் ஒரு கர்பிணிப் பெண்ணை பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கியது மிகவும் கண்டிக்கதக்கது. இதை உரிய விசாரணை செய்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் சமீபகாலமாக சிறுமிகள், மாணவிகள், இளம் பெண்கள் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகமாகி கொண்டே போகிறது. இதற்கு காரணம் சட்டம் ஒழுங்கின் சீர்கேடே.
பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறாமல் இருக்க, குற்றச்செயலில் ஈடுபடுவோரை காவல் துறை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்.
எனவே தமிழக அரசு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை சரியாக முறையாக 24 மணிநேரமும் கண்காணித்து பெண்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டுமென்று தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) சார்பில் வலியுறுத்துகிறேன்..
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா
