தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாறு மற்றும் செய்யாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாலாற்றுத் தரைப்பாலம் முழுவதுமாக மூழ்கி வெள்ள நீர் ஆர்ப்பரித்து கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கரையோரம் மற்றும் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில், பாலாறு மற்றும் செய்யாறு பகுதிகளில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் ஆகியோர் இன்று (19.11.2021) நேரில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், பெரும்பாக்கம், செவிலிமேடு, ஓரிக்கை, வாலாஜாபாத் மற்றும் வெங்கசேரி ஆகிய தரைபாலங்களையும் அவர்கள் நேரில் பார்வையிட்டனர்.
பாலாறு மற்றும் செய்யாறு கரையோர பகுதிகளில் மீட்பு மற்றும் அத்யாவசிய உணவுப் பொருட்கள் வழங்கும் பணிகளில் இன்னும் அதிக எண்ணிக்கையிலான குழுக்களை ஈடுப்படுத்த வேண்டும். அப்போதுதான் மக்களின் அதிருப்தியில் இருந்து அதிகாரிகள் தப்ப முடியும்.
–Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com
