கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆய்வாளர் ஆர். மாதையன் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டபோது, 14.11.2021 அன்று அதிகாலை 2:55 மணிக்கு, இவர் சென்ற போலீஸ் ஜீப்பை கண்டவுடன், சாலை ஓரத்தில் நின்ற இரண்டு பேர் ஓட்டம் பிடித்தனர்.
இதை கண்ட காவல் ஆய்வாளர் ஆர். மாதையன் ஜீப்பில் இருந்து குதித்து, அவர்களைத் துரத்த தொடங்கினார். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூர ஓட்டத்திற்கு பிறகு; ஒருவன் மட்டும் அவர் பிடியில் சிக்கினான். விசாரணையில் அவன் பிரபல வாகன திருடன் என்பது தெரியவந்தது.
இரவு நேரத்தில் ஆபத்தான சாலையில் தங்கள் உயிரை துச்சமாக கருதி திருடனை விரட்டி பிடித்த சூலூர் காவல் ஆய்வாளர் ஆர்.மாதையன் மற்றும் அவர் உடன் இருந்த காவலர்களின் பணி உண்மையிலுமே பாராட்டத்தக்கது.
–Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com
