தொடர் பாலியல் துன்புறுத்தல் காரணமாக கோவையில் 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் பேரில் கோவை ஆர்.எஸ். புரம் சின்மயா வித்யாலயா பள்ளி இயற்பியல் ஆசிரியர், மிதுன் சக்கரவர்த்தி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவியின் குடும்பத்தார் புகார் அளித்தும்; உடனே உரிய நடவடிக்கை எடுக்காத சின்மயா வித்யாலயா மெட்ரிக் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனையும் போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து கோவை ஆர்.எஸ். புரம் மகளிர் காவல் நிலையத்தை நாம் தொடர்பு கொண்டோம்.
ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மற்றும் ஆர்.எஸ். புரம் சின்மயா வித்யாலயா முதல்வர் மீரா ஜாக்சன் ஆகியோரை காவல்துறை கைது செய்துருப்பதை அவர்கள் நம்மிடம் தெரிவித்தனர். இது சம்மந்தமாக கோவை ஆர்.எஸ். புரம் மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு Crime No: 10/2021 செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்கொலை செய்துகொண்ட மாணவி எழுதியதாக சொல்லப்படும் (Suicide Note – தற்கொலை குறிப்பு) கடிதம்; மிக பெரிய குழப்பத்தையும், அதிர்ச்சியையும், அதே சமயம் போலிசாருக்கு தலைவலியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் ஒரு விசியம் மட்டும் மிக தெளிவாக தெரிகிறது!- கைது செய்யப்பட்டுள்ள மிதுன் சக்கரவர்த்தி; ஆசிரியர் என்ற ரூபத்தில் நாடகமாடிய ஒரு கடைந்தெடுத்த மகா அயோக்கியனென்று! -ஆம், அவரது வாட்ஸ் ஆப் பதிவுகள் அதைதான் உறுதிப்படுத்துவதாக உள்ளது.
மிதுன் சக்கரவர்த்தியின் நடவடிக்கையால் தற்போது தற்கொலை செய்துகொண்ட இந்த மாணவி மட்டுமல்ல; இன்னும் பல மாணவிகளும், சில பெண் ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டிருக்க கூடும்.
எனவே, விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டால் மட்டுமே; மிதுன் சக்கரவர்த்தி ஆசிரியராக மட்டும் அங்கு பணியாற்றினாரா?! (அல்லது) மற்றவர்களின் தேவைக்காக மாணவிகளை வற்புறுத்தினாரா?!-என்பது தெரிய வரும்.
மேலும், ரீத்தா ஓட தாத்தா, எலிசா சாரோட அப்பா!-இவர்களெல்லாம் யார்?! -இவர்களுக்கும், தற்கொலை செய்துகொண்ட மாணவிக்கும் என்ன தொடர்பு?!
இவற்றை முறையாக விசாரித்தாலே; மேற்காணும் கேள்விகளுக்கு விடை கிடைத்து விடும்.
இவ்விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும், உள்துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலின் உன்னிப்பாக கண்காணித்து உரிய நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டும்.
–Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com
