திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட, திருச்சி -கல்லணை சாலை கீழமுல்லக்குடி ஊராட்சி, புத்தாபுரம் கிராமம் அருகே காவிரி ஆற்றின் உள்ளே சுமார் 200 மீட்டர் தொலைவில், ஆற்றின் நடுவே உள்ள புதரின் அருகே அடையாளம் தெரியாத அழுகிய நிலையில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக நேற்று திருவெறும்பூர் காவல்துறையினருக்கு வந்த தகவலை அடுத்து, திருவெறும்பூர் போலீசார் மற்றும் நவல்பட்டு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-ஆர்.சிராசுதீன்.
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com
