கீழமுல்லக்குடி ஊராட்சி காந்திபுரம் கிராமம் பழுதடைந்திருக்கும் தொட்டி
கீழமுல்லக்குடிகாந்திபுரம் கிராமம் ஆழ்துளை அடிபம்பின் இன்றைய நிலை
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியம், கீழமுல்லக்குடி ஊராட்சியில் உள்ள காந்திபுரம், ஒட்டக்குடி, புத்தர்நகர், வளன்நகர் ஆகிய கிராமங்களில் குடிநீர் குழாய்கள் பழுதடைந்திருப்பதாலும், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியின் மூலம் முறையாக குடி தண்ணீர் வராததாலும் அப்பகுதி கிராம மக்கள் குடி தண்ணீர் இன்றி மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், கீழமுல்லக்குடி ஊராட்சியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள் அனைத்தும் முறையாக சுத்தம் செய்யாததால் அழுக்கடைந்து சுகாராமற்ற முறையில் காணப்படுகிறது.
இது சம்பந்தமாக கீழமுல்லக்குடி ஊராட்சி செயலரிடமும் மற்றும் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. கொளுத்தும் கோடைவெயிலில் குடிதண்ணீர் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
பொது குடி நீர் குழாயில் தண்ணீர் வராததால் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் தண்ணீருக்காக காத்துகிடக்கும் காந்திபுரம் கிராம பொதுமக்கள்.
எனவே, திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் இப்பகுதியை நேரில் பார்வையிட்டு குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் சரியான முறையில் குடிதண்ணீர் வருவதற்கு போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுப்பாரா? -பொறுத்திருந்து பார்போம்.
– கே.பி.சுகுமார்,
