சுத்தம் செய்யப்படாத குடிநீர் தொட்டிகள்! நோய் பரப்பும் மாடக்குடி ஊராட்சி நிர்வாகம்!அதிகாரிகள் அலட்சியம்.

திருச்சி மாவட்டம், லால்குடி ஊராட்சி ஒன்றியம், மாடக்குடி ஊராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட V. துறையூரில் உள்ள குடிநீர் தொட்டி.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாடக்குடி ஊராட்சியில் ஈஞ்சூர், மாவிலிதெரு, பள்ளிவிடை, பெரப்பன்குடி, சாத்தம்பாடி, V.துறையூர், மாடக்குடி, வைப்பூர் ஆகிய குக்கிராமங்கள் இருக்கிறது. இந்தக் கிராமங்களில் உள்ள குடிநீர் தொட்டிகள் அனைத்தும் ஒரு ஆண்டுக்கு மேலாக சுத்தம் செய்யப்படாமல் இருந்து வருகிறது. இது சம்பந்தமாக அப்பகுதி பொதுமக்களின் சார்பாக லால்குடி வட்டார வளர்ச்சி அலுவலருக்கும், திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் பலமுறை எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தும் இந்த நிமிடம் வரை குடிநீர் தொட்டிகள் சுத்தம் செய்யப்படவில்லை.

இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த பகுதிக்கு வந்த லால்குடி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் V.துறையூரை சேர்ந்த காந்தி காமராஜ் என்பவர் நேரடியாக சந்தித்து குடிநீர் தொட்டிகள் சுத்தம் செய்யப்படாமல் இருப்பது குறித்து தெரிவித்துள்ளார். அதற்கு அந்த மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் “யோவ் முட்டாள் தனமா பேசாதய்யா” நானே இந்த பொறுப்புக்கு வந்து ஒரு மாதம்தான் ஆகுது என்று அந்த நபரை மிரட்டி உள்ளார். மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு பொதுமக்களையே மிரட்டும் கொடுமையை எங்கே போய் சொல்வது?

குடிநீர் என்பது மனிதனின் அத்தியாவாசிய ஜீவ ஆதாரம், குடிநீர் மூலமாக தான் பல நோய்கள் பரவி வருகிறது. இப்படி ஒரு ஆண்டுக்கு மேலாக குடிநீர் தொட்டிகள் சுத்தம் செய்யாமல் இருந்தால் இது எந்த வகையில் நியாயம்? மேலும், இந்த ஊராட்சியில் பணிகள் செய்து முடிக்காமலேயே பணிகள் செய்து முடித்ததாக நிதி மோசடி நடந்துள்ளது.

Document-19

எனவே, சம்பந்தப்பட்ட துறைச் சார்ந்த உயர் அதிகாரிகள் இப்பகுதியை நேரில் பார்வையிட்டு மக்களின் அடிப்படை தேவைகளைப் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும். செய்வார்களா? பொறுத்திருந்துப் பார்ப்போம்.

Leave a Reply