எங்களைப்பற்றி


கருத்துக்கள் புனிதமானவை !

விமர்சனங்கள் சுதந்திரமானவை !


 

(சு) வாசிக்கும் அன்பு நெஞ்சங்களுக்கு அன்பு வணக்கம்.

          கடலெனும் பத்திரிகை உலகில், எத்தனையோ இதழ் ஓடங்கள் எதிர் நீச்சல் போட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. சந்தர்ப்பச் சூழ்நிலையின் காரணமாக பல நெருக்கடியினால் பல இதழ்கள் மூழ்கி விடுவதும்  உண்டு. வளர்ந்தவர்களுக்கே வால் பிடிப்பதற்கும், நிழலை நிஜமென்று சொல்வதற்கும் ஏராளமான நபர்கள் இன்னும் இருந்துக் கொண்டேதான் இருக்கிறார்கள் என்பதை மனிதாபிமானம் உள்ளவர்கள் யாரும் மறக்கவோ, மறுக்கவோ இயலாது. ஆனால், நமது “உள்ளாட்சித் தகவல்” இதழ், நாடு வளமாகவும், மக்கள் நலமாகவும் வாழவேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு பக்கத்திற்கு பக்கம் பயனுள்ளச் செய்திகளைத் தந்து, படிப்பவர்களின் சிந்தனைக்கு விருந்தாகவும், இச்சமுதாயத்திற்கு அருமருந்தாகவும், அறியாமை இருளை அகற்றும் ஒளிவிளக்காகவும்,  உண்மையானவர்களுக்கு உன்னத வழிக்காட்டியாகவும், ஊழல் பேர்வழிகளுக்கு இது ஒரு ஈட்டியாகவும், கடந்த 19 ஆண்டுகளாக ஒழுக்கமாகவும், நடுநிலையோடும், சுதந்திரமாகவும், தமது இதழியல் பணியை இதய சுத்தியோடு ஆற்றியுள்ளது. மேலும், இதழ் சிறப்புடன் வெளிவருவதற்கு எனது 25 ஆண்டுகளுக்கு மேலான இதழியல் அனுபவம் பயன்படும் என்று முழுமையாக நம்புகின்றேன். வாசக நீதிபதிகளாகிய உங்களின் எதிர்ப்புகளையும், எதிர்பார்புகளையும், தங்களின் மேலான ஆலோசனைகளையும் உடனுக்குடன் எங்களுக்கு தாராளமாக எழுதுங்கள்.

 

என்றும் தோழமையுடன்,

டாக்டர் துரை பெஞ்சமின்

(ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர்)

Amazing offer for you…

Recent Posts

ullatchithagaval © 2014