இந்தியாவை அரசாட்சி செய்வது யார்? நரேந்திரமோதி தலைமையிலான அமைச்சரவையா? (அல்லது) சுப்பிரமணியன் சுவாமியா?

subrahmanian -modiதமிழக மீனவர்கள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில், இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் தொலைபேசியில் பேசியதாக சுப்பிரமணியன் சுவாமி 09.11.2014 அன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

s.samyஇது குறித்து இந்திய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் சயத் அக்பருத்தினிடம், செய்தியாளர்கள் 10.11.2014 அன்று விளக்கம் கேட்டப்போது, 5 இந்திய குடிமகன்களை இந்தியாவிற்கு பத்திரமாக திரும்ப அழைத்துக் கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையுமே நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

நாங்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் எங்களுக்கு ஒரு சுமூகமான முடிவு இதுவரை எட்டவில்லை. இது ஒரு முக்கியமான, சிக்கலான, உணர்வுப்பூர்வமான விவகாரம். இதில் நாங்கள் ஒரு சுமூகமான தீர்மானத்தை எட்டிய பிறகு நாங்கள் அதைப் பற்றி அனைவருக்கும் தெரிவிப்போம் என வெளியுறவு துறையின் செய்தி தொடர்பாளர் சயத் அக்பருத்தின் தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோதியும், இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷவும் தொலைபேசியில் பேசியதை இதுவரை இந்திய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், சர்வதேச அளவில் 9 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்பற்றுபவர்களை (followers) தனது ட்விட்டர் பக்கத்தில் வைத்திருக்கும் சுப்பிரமணியன் சுவாமி, 08.11.2014 அன்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் தொலைபேசியில் பேசினார் என்று, 09.11.2014 அன்று மாலை 6.52 மணிக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிந்துள்ளார்.

இது இந்திய நாட்டின் இறையாண்மைக்கும், பாதுகாப்பிற்கும் பங்கம் விளைவிக்கும் செயல்.

நரேந்திர மோதி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சி பொறுப்பிற்கு வந்ததிலிருந்து இதுநாள் வரை இந்தியாவின் வெளியுறவு கொள்கையிலும், அனைத்து ராஜ்ஜிய உறவுகளிலும் சுப்ரமணியன் சுவாமியின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.

அப்படியானால் இந்தியாவை அரசாட்சி செய்வது யார்? நரேந்திரமோதி தலைமையிலான அமைச்சரவையா? அல்லது சுப்பிரமணியன் சுவாமி என்ற தனி நபரா?

அனைத்து அதிகாரங்களையும் தன் வசம் வைத்திருக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி, சுப்ரமணியன் சுவாமியை ஆடவிட்டு அமைதியாக வேடிக்கைப் பார்ப்பதின் மர்மம் என்ன?

சுப்பிரமணியன் சுவாமியை போல, வேறு யாராவது செயல்பட்டாலோ (அல்லது) செயல்பட முன் வந்தாலோ அதை நரேந்திரமோதி தலைமையிலான அமைச்சரவை ஏற்றுக்கொள்ளுமா? (அல்லது) அதைப் பார்த்துக் கொண்டுதான் சும்மா இருக்குமா?

இதன் மூலம் ஒட்டு மொத்த இந்தியாவும் தன் கையில்தான் இருக்கிறது என்ற தோற்றத்தை இந்த சுப்பிரமணியன் சுவாமி உலக தலைவர்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறார்.

இது இந்திய ஆட்சியாளர்களையும், ஒட்டு மொத்த இந்திய மக்களையும் அவமதிக்கும் செயல். இதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி என்ன பதில் சொல்ல போகிறார்?

-டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in