அதிகளவில் மழை பெய்துள்ளதால் சிறுதானிய மகசூல் அதிகளவில் கிடைக்கும்: விவசாயிகள் நம்பிக்கை!

ye2210P3ye3010P3 ye3010P2

ye3010P1சேலம் மாவட்டம், ஏற்காட்டில் உள்ள 67 கிராமங்களில் வாழவந்தி, மாரமங்களம், அரங்கம், செந்திட்டு, பெலாக்காடு, கேழையூர், மதூர், நல்லூர், மோட்டூர் உள்ளிட்ட கிராமங்களில் மட்டும்தான் சிறுதானிய பயிர்களான சாமை, கேழ்வரகு, கம்பு, ஆரியம், நெல் உள்ளிட்டவை விவசாயம் செய்யப்படுகின்றன.

கடந்த வருடம் போதுமான மழை இல்லாததால் எதிர்பார்த்த அளவிற்கு மகசூல் கிடைக்கவில்லை. தற்போது பருவமழை அதிகளவில் பெய்துள்ளதால் இந்த ஆண்டு அதிகளவில் மகசூல் கிடைக்கும் என்று விவசாயிகள் நம்பிக்கையோடு கூறுகின்றனர்.

மேலும், பல மாதங்களாக வறண்டு கிடந்த ஆறுகளில் தண்ணீர் அதிகளவில் பெருக்கெடுத்து ஓட துவங்கியுள்ளது. வறண்டு கிடந்த கிணறுகளில் அதிகளவில் தண்ணீர் அதிகரித்துள்ளது. இதனால் நிலத்தடி நீரும் அதிகரித்துள்ளது.

-நவீன் குமார்.