ஏற்காடு ஏரியை சுற்றியுள்ள கடைகளை அகற்ற 10 நாட்கள் அவகாசம்!

ye1310P2ஏற்காடு ஏரியை சுற்றி அமைந்துள்ள கடைகள், லாரிகள், ஆட்டோக்கள் மற்றும் டாக்ஸி உள்ளிட்டவைகளை அகற்றகோரி சேலம் மாவட்ட ஆட்சியரின் உத்தரவிட்டிருந்தார். இதன் பேரில் கடந்த சனிக்கிழமை ஏற்காடு தாலுக்கா அலுவலகத்தில் பி.டி.ஓ, தாசில்தார், இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் கலந்துக்கொன்ட ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.

பின்னர் அன்று மதியமே அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பலகைகள், லாரிகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டன. சாலையோரக் கடைகளை அகற்ற உரிமையாளார்களுக்கு ஞாயிறு ஒரு நாள் அவகாசம் கொடுத்து சென்றனர்.

யாரும் கடைகளை அகற்றாததால் நெடுஞ்சாலை துறை உதவியுடன் கடைகளை அகற்ற பி.டி.ஓ மற்றும் தாசில்தார் வந்தனர். அப்போது இவர்களை கடை உரிமையாளர்கள் முற்றுகையிட்டு தங்கள் வாழ்வாதரத்திற்காக கடைகள் வைக்க வேறு இடம் கேட்டனர்.

இந்த பேச்சுவார்த்தை 2 மனி நேரம் நீடித்தது. பின்னர் கடை உரிமையாளர்கள் தீபாவளி வியாபாரம் நடத்திவிட்டு கடைகளை அகற்றி கொள்வதாக எழுதி கொடுத்தனர். இதனால் தீபாவளி வரை கடைகளுக்கு 10 நாள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

-நவீன் குமார்.