விமானச் சக்கரம் அருகில் திருட்டுத் தனமாக பயணம் செய்த 16 வயது பையன் : அமெரிக்காவில் நடந்த அதிசயம்!

16-year-old boy who traveled from San Jose, California to Maui,1 Hawaii 16-year-old boy who traveled from San Jose, California to Maui, Hawaiiஅமெரிக்காவில் விமானத்தின் சக்கரங்கள் உள்ள பெட்டியில் அமர்ந்தவாறு 16 வயதுப் பையன் ஒருவன் திருட்டுத் தனமாக பயணம் செய்துள்ளான்.

உறையும் குளிரில் கலிபோர்னியாவில் இருந்து ஹவாயி வரை 5 மணி நேரப் பயணத்தை இந்தப் பையன் கடந்து வந்துள்ளதாக ஹவாயி காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஹவாயின் மோயி விமானநிலையத்தில் எந்தவிதமான அடையாள ஆவணங்களும் இன்றி இந்தப் பையன் கண்டுபிடிக்கப்பட்டதாக மத்திய புலனாய்வு துறை (FBI- federal bureau of investigation) அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பசிபிக் சமுத்திரத்தைக் கடந்துவந்த பயணத்தில் வரும் வழியில் போதியதளவு பிராணவாயு (Oxygen) இல்லாமல் மயங்கியிருந்த அந்தப் பையனுக்கு விமானம் தரையிறங்கும்போது நினைவு திரும்பியுள்ளது. அந்த பையனை மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதித்தனர். அவன் உயிருடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதுபற்றி அந்த பையனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர்.

-ஆர். மார்ஷல்.