திண்டுக்கல் அருகே பட்டப்பகலில் கணவன், மனைவி வெட்டிப் படுகொலை!

திண்டுக்கல் அருகே உள்ள நல்லாம்பட்டி, நெசவாளர் காலனியில் உறவினர் வீட்டில் வசித்து வந்த பாறைப்பட்டியை சேர்ந்த பாண்டி, அவரது மனைவி பஞ்சவர்ணம் ஆகிய இருவரையும் பட்டப்பகலில் இன்று வெட்டிப் படுகொலை செய்துள்ளனர்.  வெட்டுவதற்கு முன்பு அவர்கள் மீது நாட்டு வெடிகுண்டை வீசி  அவர்களை நிலைகுலைய வைத்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் மற்றும் உதவி துணை காவல் கண்காணிப்பாளர் சுகாசினி ஆகியோர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-அழகுராஜா.

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி முதுகலை சமூகப்பணி மாணவர்கள் சார்பில் அன்னை ஆசிரமத்தில் ஆதரவற்ற முதியோர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அஇஅதிமுக தலைமை அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைப்பெற்று வருகிறது.

Leave a Reply